×

கொரோனா விதிகளை மீறிய 25 தியேட்டர்கள் மீது வழக்கு

சென்னை: கொரோனா விதிகளை மீறிய 25 தியேட்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் பொங்கலுக்கு மாஸ்டர் படம் வெளியாவதை தொடர்ந்து 100 சதவீதம் அனுமதி அளிக்க வேண்டும் என்று திரைதுறையினர் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து 100 சதவீதம் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக 100 சதவீத இருக்கை என்ற உத்தரவை தமிழக அரசு திரும்ப பெற்றுவிட்டது. இதனால் 50 சதவீதம் அனுமதியுடன் மாஸ்டர் படம் வெளியானது. ஆனால் பல தியேட்டர்களில் விதிகளை முறையாக கிடைபிடிக்கவில்லை. இவ்வாறு விதிகளை முறையாக கடைபிடிக்காத 25 தியேட்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ஜாஃபர்கான்பேட்டை, அயனாவரம், கோயம்பேடு, எம்ஜிஆர் நகர், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் 25 தியேட்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சில திரையரங்குகளுக்கு ₹5000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.



Tags : Case against 25 theaters for violating corona rules
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...