×

சென்னை- குஜராத்துக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை - குஜராத் இடையே புதிய வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்ட்ரல் - கெவடியா (09120, 09119) வழித்தடத்தில் முதல்முறையாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி குஜராத் மாநிலம் கெவடியாவில் இருந்து வரும் 20ம் தேதி முதல் புதன்கிழமைகளில் காலை 9.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக சென்ட்ரலில் இருந்து வரும் 24ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நடந்து வருகிறது. இந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவைக்கான முன்னோட்டத்தை இன்று காலை 11.12 மணிக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Gujarat ,announcement ,Southern Railway , Chennai-Gujarat special train: Southern Railway announcement
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...