×

தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா: இன்று 775 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை..!

சென்னை: தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்  பாதித்தவர்கள் எண்ணிக்கை (8,30,183) 8 லட்சத்து 30 ஆயிரத்து 183 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில்,  தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,  

* தமிழகத்தில் மேலும் 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 8,30,183ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 775 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 8,11,798 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,257 ஆக உயர்ந்துள்ளது.

* அரசு மருத்துவமனையில் 2; தனியார் மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 176 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,28,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,51,77,094 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 52,307 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் தற்போது 6,128 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 5,01,808 பேர் ஆண்கள், இன்றைக்கு  மட்டும் 371 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,28,341 பேர் பெண்கள், இன்றைக்கு  மட்டும் 239 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 34 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு  திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 251 மையங்களில் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளது. அரசு மையங்கள் 68; தனியார் மையங்கள் 183.

வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் விவரம்:

ஐக்கிய அரபு நாடுகள் - 02

ஆந்திரா - 01

பீகார் - 01

மேற்குவங்கம் - 01..

Tags : Corona ,Tamil Nadu ,Health Department , tamilnadu , corona , health department
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...