×

மேற்குவங்கத்தில் 200 சீட் இலக்கு நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை

புதுடெல்லி: மேற்குவங்க மாநில முதல்வர் முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு எதிராக பாஜக பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் சிலர், பாஜகவில் சேர்ந்து வருவதால், அம்மாநில பேரவை தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று மாலை மேற்குவங்க பாஜக குழுவினர் சந்தித்தனர். அமித் ஷாவின் இல்லத்தில் நடந்த சந்திப்பின் போது, மாநிலத்தில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்வதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், வாக்குச்சாவடி மட்டத்தில் அதிகளவிலான நிர்வாகிகளை நியமிக்கவும், தீவிர பிரசார யுக்தியை கையாளுமாறும் அறிவுறுத்தி உள்ளார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராய், தேசிய பொதுச் செயலாளரும், மேற்கு வங்கத்தின் பொறுப்பாளருமான கைலாஷ் விஜயவர்கியா, மாநிலத் தலைவர் திலீப் கோஷ் மற்றும் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் அமிதாப் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இக்கூட்டத்தில், மாநிலத்தில் அமைப்பை வலுப்படுத்த புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்கவும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தவும், மாற்றுக் கட்சி நிர்வாகிகளை கட்சியில் சேர்ப்பதால் ஏற்படும் தாக்கும் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags : Amit Shah ,target executives ,West Bengal , In West Bengal, 200, seat target, Amit Shah
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...