×

பிறந்த நாளை கொண்டாட துப்பாக்கியால் ‘கேக்’ வெட்டியவர் கைது

லக்னோ: பட்டா கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி சென்னை போன்ற நகரங்களில் சில ரவுடிகள் கேக் ெவட்டி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அவர்களுடன் பிறந்த நாளில் பங்கேற்ற நபர்களே அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். அதன்பின், போலீசார் தலையிட்டு அந்த நபர்களை பிடித்து கைது செய்கின்றனர். ஆனால், உத்தரபிரதேச மாநிலம் ஹபூரில் பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவதை விட, துப்பாக்கியால் கேக்கை வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சிவப்பு நிற சட்டை அணிந்த ஒரு இளைஞன், தனது பிறந்தநாள் கேக்கை கைத்துப்பாக்கியால் வெட்டுகிறான். கேக் வெட்டப்படும் இடத்தில் அவரது நண்பர்கள் கூடியிருந்தனர். அந்த இளைஞன் துப்பாக்கியால் கேக்கை வெட்டியதும், அவர்களை அவனை தூக்கிபிடித்து கொண்டாடுகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சுமார் 20 விநாடிகள் வரை அந்த வீடியோ ஓடுகிறது. இதையறிந்த போலீசார், துப்பாக்கியால் கேக் வெட்டிய ஷாஹனாவாஸ், அவரது நண்பர் ஷாகிப் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : birthday , Assembly election, contest, BJP, seat, AIADMK
× RELATED அன்புமணியால்தான் பாஜவுடன் கூட்டணி: ராமதாஸ் விரக்தி