தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்குகிறது. பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழையும், நாளை லேசான மழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 18, 19ம் தேதிகளில் பெரும்பாலன பகுதிகளில்  வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், ஈச்சன்விடுதியில் தலா 9 செ.மீ., ராமநாதபுரத்தில் 8 செ.மீ., பாபநாசம் மற்றும் மண்டபத்தில் தலா 7 செ.மீ., மணிமுத்தாறு, ராமேஸ்வரம், தலைஞாயிறு பகுதிகளில் தலா 6 செ.மீ., காயல்பட்டினத்தில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

Related Stories:

>