×

சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து குஜராத்தில் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்கள் : நாளை பிரதமர் மோடி திறந்து வைப்பு

புதுடெல்லி,:சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்களை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
நாட்டின் பல பகுதியிலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலைக்கு 8 ரயில்களை நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயில்கள் ஒற்றுமை சிலைக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்கும். குஜராத்தில் தபோய் - சந்தோத் அகல ரயில் பாதை, சந்தோத் -கெவாடியா புதிய அகல ரயில் பாதை, பிரதாப் நகர் - கெவாடியா மின்மயமாக்கப்பட்ட புதிய வழித்தடம், தபோய், சந்தோத் மற்றும் கெவாடியா பகுதியில் புதிய ரயில் நிலைய கட்டிடங்கள் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

இந்த கட்டிடங்கள், உள்ளூர் அம்சங்கள் மற்றும் பயணிகளுக்கான நவீன வசதிகளுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பசுமை சான்றிதழ் பெற்ற நாட்டின் முதல் ரயில் நிலைய கட்டிடம் கெவாடியா என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரால் தொடங்கி வைக்கப்படவுள்ள 8 ரயில்களில், சென்னை - கெவாடியா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் (09119/20) அடங்கும். இதில், ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில், வான் பகுதியை பார்வையிடும் வகையில் கண்ணாடி மேற்கூரையுடன் கூடிய ‘விஸ்தா - டூம் சுற்றுலா பெட்டிகள்’ உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Kevadia ,Modi ,country ,Patel ,Chennai ,Gujarat , Prime Minister Modi
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...