×

மீண்டும் முதல்வர் எடப்பாடி தானாம் : கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்

கரூர், கரூர் மாவட்டம் ஏமூர் பகுதியில் நேற்று சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த கிளி ஜோசியர் ஒருவரிடம் சென்ற அமைச்சர், ₹100 கொடுத்து ஒரு சீட் எடுக்க சொல்லி கிளி ஜோசியம் பார்க்க தரையில் அமர்ந்தார்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கிளி ஜோசியம் பார்த்தார். கூண்டைவிட்டு வெளியே வந்த கிளி சீட்டுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து தந்தது. அந்த சீட்டை பிரித்து பார்த்தால் சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன் உள்ளிட்ட சாமி குடும்ப படம் வந்தது. பின்னர் அங்கிருந்து அமைச்சர் புறப்பட்டு சென்றார்.



Tags : Chief Minister ,minister ,Edappadi , Parrot Prophecy
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...