1966 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெளிநாட்டு தலைவர் பங்கேற்காத முதல் குடியரசு தின விழா : 25,000 பேர் மட்டுமே பங்கேற்பு

புதுடெல்லி : கொரோனா ெதாற்று பரவல் அச்சம் காரணமாக, வரும் 26ம் தேதி கொண்டாடப்படும் நாட்டின் 72வது குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்ேகற்க இருப்பதாக இருந்தது. ஆனால், உருமாறிய கொேரானா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், போரிஸ் ஜான்சன் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதனால், இந்தாண்டுக்கான குடியரசு தின விழாவில் வெளிநாடுகளை சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. இதுெதாடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் வாஸ்தவா கூறுகையில், ‘இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று, எந்தவொரு நாட்டின் தலைவரும் சிறப்பு அழைப்பார்களாக பங்கேற்கவில்லை’ என்றார்.

கடந்த 1966 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெளிநாட்டு தலைவர் பங்கேற்காத முதல் குடியரசு தினமாக இந்தாண்டு அமைகிறது. முன்னதாக 1966ம் ஆண்டில், ஜனவரி 11ம் தேதி முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி திடீரென மறைந்த பின்னர், ஜனவரி 24ம் தேதி இந்திரா காந்தி பிரதமராக பதவியேற்றபோது நடந்த குடியரசு தின அணிவகுப்பில் எந்த வெளிநாட்டு விருந்தினர்களும் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் நடந்த விழாக்களில் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். இது தவிர, 1952 மற்றும் 1953ம் ஆண்டுகளில் நடந்த குடியரசு தின கொண்டாட்டங்களில் வெளிநாட்டு தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை நடைபெறவிருக்கும்  குடியரசு தின  அணிவகுப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒன்று, தொற்று பரவல் அச்சம் காரணமாக, அணிவகுப்பின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் 25 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பர். இந்த தகவலை டெல்லி மாவட்ட காவல்துறை டி.சி.பி டாக்டர் இஷ் சிங்கால் செய்துள்ளார். அணிவகுப்பானது விஜய் சவுக் முதல் விழா நடக்கும் மைதானம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்க அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே டிக்கெட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories:

>