கரூர் சுக்காலியூர் அருகே சரிந்து விழுந்தது மின்கம்பங்கள்: கரன்ட் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கரூர்: கரூர் சுக்காலியூர் அருகே மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் சுக்காலியூர் பகுதியில் கடந்த சில வாரங்களாக சாலையோரத்தில் கழிவுநீர் வாய்க்கால் செல்லும் வகையில் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுக்காலியூர் பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தின் அருகில் இருந்த மின்கம்பங்கள் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு சரிந்து விழுந்துள்ளன.

இதனால், மின் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரி செய்வதோடு, இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>