×

கொடைக்கானலில் மழைக்கு 10 வீடுகள் இடிந்து சேதம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் மழைக்கு 10 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், கொடைக்கானல் நகர், பேத்துப்பாறை, பண்ணைக்காடு, கே.சி.பட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒரு வீடும், பூம்பாறை பகுதியில் 6 வீடுகளும் இடிந்து விழுந்தன. இந்த வீடுகளில் தங்கியிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கொடைக்கானல் தாசில்தார் சந்திரன் கூறியதாவது.

கொடைக்கானல் தாலுகாவில் அதிக மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு 10 வீடுகள் பாதி அளவிற்கு இடிந்து சேதமடைந்துள்ளன. ஒரு வீட்டிற்கு 4,100 ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Tags : Kodaikanal ,houses , In Kodaikanal, rain, 10 houses, collapsed and damaged
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்