×

பொங்கல் விடுமுறையை கொண்டாட பொங்கும் உற்சாகத்தோடு குவிந்த சுற்றுலாப்பயணிகள்: கொடைக்கானலில் ஜாலியாக படகு சவாரி

கொடைக்கானல்: பொங்கல் விடுமுறையையொட்டி, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கொடைக்கானல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் உள்ள அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறையையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.

நகரில் நேற்று முழுவதும் இதமான சாரல் மழை பொழிந்து கொண்டிருந்தது; வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், சாலைகள் தெரியாமல், வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றன. நகருக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் இதமான சாரல் மழையில் நனைந்தும், ஏரியில் படகு சவாரி செய்தும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். தொடர் மழையால் குளிரையும் பொருட்படுத்தாமல், சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.


Tags : holiday ,boat ride ,Kodaikanal ,Pongal , Pongal holiday, with bubbling excitement, crowded tourists
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!