×

பணகுடியில் பொங்கல் விளையாட்டு போட்டி 45 கிலோ இளவட்டக்கல் தூக்கிய பெண்

பணகுடி: பணகுடி வட்டாரத்தில் நடந்த பொங்கல் விளையாட்டு போட்டியில் 129 கிலோ இளவட்டக்கல்லை இளைஞர் தூக்கினார். 45 கிலோ இளவட்டக்கல்லை தூக்கி பெண்கள் அசத்தினார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள  வடலிவிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி  இளைஞர் மன்றம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்பட்டன. வடலிவிளையை சேர்ந்த  ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது உடல் வலிமையை வெளிப்படுத்தினர்.
90 கிலோ எடையுள்ள  இளவட்டக்கல்லை 12 முறை கழுத்தை சுற்றி  தூக்கி சாகசம் செய்யும்  போட்டிகளில் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இதில் முத்துப்பாண்டி முதல் பரிசு பெற்றார். 129 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை ஒரே மூச்சில் தூக்கிய தங்கராஜிக்கு முதல் பரிசு கிடைத்தது. மேலும் இதுவரை பணகுடி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த இளவட்டக்கல் தூக்கும் போட்டிகளில் அதிக எடையுள்ள கல்லை தூக்கியது இது 2வது முறையாகும். கடந்தாண்டும் தங்கராஜ் சாதனை படைத்தார். இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் 45  கிலோ எடையுள்ள இளவட்டக்கல்  தூக்கும் போட்டியில் பெண்களும் கலந்து கொண்டு ஆண்களுக்கு நிகராக தங்களது  உடல் வலிமையை நிரூபித்தனர். பத்மா என்பவர் 45 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை தூக்கி முதல் பரிசினை வென்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இன்பதுரை எம்எல்ஏ, வெற்றி பெற்ற அனைவரையும் வாழ்த்தி பேசினார். மேலும் முதல் இடம் பெற்ற அனைவருக்கும் ஸ்மார்ட்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கமாக வழங்கினார். இதில் பணகுடி இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, திரைப்பட நடிகர் வின்ஸ்லி, வடலிவிளை செழியன், சிவலிங்கம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : sports competition , Panakudi, Pongal, competition, 45 kg, Ilavattakal, female
× RELATED மாநில மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு...