×

தமிழகத்தின் முன் மாதிரியாக விளங்கும் கண்ணமங்கலம் காவல் நிலையம்: சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்து டிஐஜி பாராட்டு

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் 120 சிசிடிவி கேமரா திறப்பு விழா நேற்று நடைபெற்றது. எஸ்பி அரவிந்த் தலைமை தாங்கினார். ஏடிஎஸ்பி அசோக்குமார், டிஎஸ்பி கோடீஸ்வரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ேகாவர்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வரவேற்றார். இதில் வேலூர் சரக டிஐஜி காமினி கலந்து கொண்டு கண்ணமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 120 சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.

பின்னர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிகளை திரையில் பார்த்து, தமிழகத்திற்கே இது முன் மாதிரி காவல் நிலையமாக விளங்குகிறது என பாராட்டினார். இதனை தொடர்ந்து நரிக்குறவர் குடும்பங்களுக்கு புடவை வேட்டி உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கினார். முடிவில் சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் நன்றி கூறினார். இதில் சேர்மன் சாந்தி பெருமாள், துணை சேர்மன் வேலாயுதம், ஒன்றிய கவுன்சிலர் கீதா சரவணன், கிளை செயலாளர் தேங்காய் மண்டி ரமேஷ், வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத்தலைவர் கே.டி.குமார், ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

Tags : police station ,Kannamangalam ,Tamil Nadu ,DIG ,opening , Tamil Nadu, Model, Kannamangalam Police Station, DIG Praise
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்