இனி தங்க வேட்டை தான்... ஆபரணத் தங்கத்தின் விலை செம குறைவு... சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்துள்ளது. அண்மை காலமாக தங்கம் விலை தாறுமாறாக ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஜனவரி 9ம் தேதி முதல் தங்கம் விலை மெல்ல மெல்ல இறங்கி வந்த நிலையில், ஜனவரி 13ம் தேதி முரட்டுத்தனமாக விலை குறைந்தது. இன்று மீண்டும் தங்கம் விலை கடுமையாக குறைந்துள்ளது. இது தங்கம் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தியாக வெளிவந்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

இந்த நிலையில், இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்து ரூ.4,608க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வெள்ளி ஓரளவிற்கு சந்தையில் தாக்குப்பிடிக்கும். இன்று வெள்ளியின் விலையானது, நேற்றைய விலையில் கிராமிற்கு 90 பைசா குறைந்து, இன்று கிராமானது ரூ.69.70 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.69700 க்கு விற்பனையாகிறது..

Related Stories:

>