×

குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து சாதனை படைத்த இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு தலை வணங்குகிறேன் : பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி : உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். நாடு முழுவதும் 3,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக 3 கோடி முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி இருப்பது முக்கிய மைல் கல். குறுகிய காலத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்துள்ளது; இதற்காக உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் எனது சல்யூட். உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த நாளுக்காக ஓராண்டாகவே இந்தியா காத்திருக்கிறது. தடுப்பூசி கண்டுபிடித்து  சாதனை படைத்த இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு தலை வணங்குகிறேன். மனித குலம் ஒன்றை நினைத்துவிட்டால் அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல. ஒவ்வொருவரும்  2 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். ராணுவ வீரர்கள், காவல் துறையினருக்கு தடுப்பூசியை முன்னுரிமை வழங்கப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிக்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை, வதந்திகளை நம்பவேண்டாம்.

உலகிலேயே இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் தான் மிகவும் விலை குறைவானது. தடுப்பூசி பணிகள் ஆரம்பித்தாலும், முன்பு போலவே கொரோனாவுக்கு எதிராக மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர வேண்டும்.2வது கட்ட கொரோனா தடுப்பூசி பணிகளின்போது 30 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.பொதுவாக, ஒரு தடுப்பூசி தயாரிக்க பல ஆண்டுகள் ஆகும், ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில், ஒன்று அல்ல, இரண்டு மேட் இன் இந்தியா தடுப்பூசிகள் தயாராக உள்ளன, பிற தடுப்பூசிகளின் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.குறைந்த நேரத்தில் தடுப்பூசியை உருவாக்கியிருப்பது இந்தியாவின் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்துகிறது.இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாராகும் தடுப்பூசிக்கு எந்த வகையிலும் தரம் குறைந்தவை அல்ல.இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை உலகமே தற்போது வியந்து பாராட்டுகிறது.இந்திய விஞ்ஞானிகளையும், இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசிகளையும் உலகமே நம்புகிறது.தடுப்பூசி எப்போது கிடைக்கும் என்று எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.தடுப்பூசி இதோ இப்போது கிடைத்து விட்டது, இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்களை வாழ்த்துகிறேன்,என்றார்.


Tags : researchers ,Modi ,Indian , Prime Minister Modi, proud
× RELATED விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி...