×

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட் : தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஓவரின் கடைசி பந்திலேயே முகமது சிரஜ் வார்னரை சாய்த்தார். மற்றொரு தொடக்க வீரரான மார்கஸ் ஹாரிஸ் 5 ரன் எடுத்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார்.

ஸ்டீவ் 36 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். மேத்யூ வேட் 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சதம் அடித்த லாபஸ்சேன் 108 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி டி நடராஜன் அசத்தினார். இதனால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய டிம் பெய்ன் 50 ரன் எடுத்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்துவீச்சில் அவுட் ஆனார். 47 ரன்கள் எடுத்த நிலையில் கேமரூன் க்ரீனும் வெளியேறினார்.

அடுத்துவந்த பேட் கம்ம்னிஸ் 2 ரன்னில் வெளியேறினார். லயன் 22 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட் ஆனார். கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்டாக் - ஜாஷ் ஹேசவுட் நிதான ஆட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியாக, நடராஜன் பந்துவீச்சில் ஹேசல்வுட் போல்ட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். முகமது சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினார்.


Tags : Australia ,innings ,Nadarajan ,Tamil Nadu , Australia, all out for 369 in the first innings
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...