ராமர் கோயிலுக்கு ஜனாதிபதி 5 லட்சம் நிதி

புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு நன்கொடை பெறப்பட்டு செலவு செய்யப்படுகிறது. இதன் கட்டுமானத்துக்கு அரசிடம் இருந்து பணம் எதுவும் பெறப்படவில்லை.  எனவே, நன்கொடை வசூலிப்பது தற்போது நடந்து வருகிறது. இதற்கு ஏராளமானவர்கள் கோடி கணக்கில் நன்கொடை கொடுத்து வருகின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நேற்று 5 லட்சத்து 100 ரூபாய் நன்கொடை வழங்கினார். அதற்கான காசோலையை ராமர் கோயில் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டுள்ள, ‘ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ நிர்வாகிகளிடம் வழங்கினார்.

Related Stories:

>