×

இந்தோனேஷிய தீவில் நிலநடுக்கம்: 34 பேர் பலி, 600க்கும் மேற்பட்டோர் காயம்

மமுஜூ: இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 34 பேர் பலியானார்கள்.   இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோளில் 6.2 புள்ளிகளாக பதிவானது. மமுஜி மாவட்டத்தின் தென் மேற்கே 36 கிமீ தொலைவில் 18 கிமீ ஆழத்தில் இதன் மையம் இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்தன. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் மற்றும் அதன் காரணமாக பல இடங்களில்  நிலச்சரிவு ஏற்பட்டதால்  100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. பொதுமக்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி கூக்குரலிட்டனர். பாதிக்கப்பட்ட் பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மமுஜி மாவட்டத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. இதேபோல், மஜினே மாவட்டத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த 600க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். மமுஜி மாவட்டத்தில் மட்டும் சுமார் 300 வீடுகள் மற்றும் மருத்துவமனை ஒன்று இடிந்து விழுந்தது. நிலநடுக்கத்தின் காரணமாக வீடுகளை இழந்த 15 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிபர் ஜோகோ விடோடோ ஆறுதல் கூறியுள்ளார். நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.



Tags : quake ,Indonesia ,
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!