தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியை வீழ்த்த 50க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள் இணைந்து செயல்பட முடிவு: சென்னையில் 20ம் தேதி ஆலோசனை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜவை தோற்கடிக்க பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழர் நலனுக்கும், தமிழ்நாட்டின் நலனுக்கும் மத்திய அரசு எதிராக இருப்பதாக தமிழ் அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக இந்தி திணிப்பு, எட்டுவழிச்சாலை, டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழக மக்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தாலும், மாநில அரசின் ஆதரவுடன் மத்திய அரசு இந்த திட்டங்களை செயல்படுத்த தொடர்ந்து முனைப்பு காட்டி வருகிறது. இதை தமிழ் அமைப்புகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். மேலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜ கூட்டணியை தோற்கடிக்க அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி, தமிழர் முன்னணி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, பச்சை தமிழகம், மே 17 இயக்கம், இந்திய ேதசிய லீக், தமிழ்நாடு பொதுவுடமை கட்சி, தமிழ்த்தேசிய குடியரசு இயக்கம், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா, நீலப்புலிகள் இயக்கம், தமிழர் உரிமை இயக்கம், தமிழக மக்கள் புரட்சி கழகம் ,தமிழ்தேச மக்கள் கட்சி, சோசலிச மையம், தியாகி இம்மானுவேல் பேரவை, தமிழ்தேசிய விடுதலை இயக்கம், தமிழ்ப் பேரரசு கட்சி, சிபிஐ (எம்-எல்) ரெட் ஸ்டார், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழக மக்கள் விடுதலை இயக்கம், தமிழக மக்கள் மன்றம், தமிழ்தேச பாதுகாப்பு இயக்கம், பெரியார் அம்பேத்கர் மக்கள் இயக்கம், தமிழர் அறம், சமூக நீதிக்கான மக்கள் நடுவம், தமிழ்வழிக் கல்வி இயக்கம், பராம்பரிய மீனவர் கூட்டமைப்பு, அனைத்து மக்கள் நீதிக் கட்சி, தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்,

நாகர்சேனை, பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம், தன்னாட்சி இயக்கம், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், இந்திய கெதர் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மீனவர் பேரவை, புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை, மக்கள் விடுதலை முன்னணி, அம்பேத்கர் நலப்பேரியக்கம், ஏழை மக்கள் முன்னேற்றக் கட்சி, தமிழ்தேசிய இறையாண்மை, சாமானிய மக்கள் கட்சி, தமிழர் கழகம், தமிழ்நாடு மக்கள் மன்றம் உள்ளிட்ட 50க்கு மேற்பட்ட தமிழ் அமைப்புகள் இது தொடர்பாக வருகிற 20ம் தேதி சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>