தமிழிலும் அஞ்சல்துறை தேர்வு : அன்புமணி வரவேற்பு

சென்னை: தமிழிலும் அஞ்சல்துறை தேர்வு நடத்துவதை பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வரவேற்றுள்ளார். இது குறித்து டிவிட்டரில்: அஞ்சல்துறை கணக்கர் பணிக்காக பிப்ரவரி 14ம் தேதி நடைபெறவுள்ள போட்டித் தேர்வுகளை தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று அஞ்சல்துறை அறிவித்திருக்கிறது. இது தமிழக மக்களின் எழுச்சிக்கு கிடைத்த வெற்றி. அஞ்சல்துறை தேர்வுகளை தமிழிலும் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது. அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி. மத்திய அரசின் இந்த முடிவை பாமக வரவேற்கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>