துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கத்தியால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை முயற்சி

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் கத்தியால் கழுத்தறுத்து விசாரணை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் சூளைமா நகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (30), வீட்டில் 2 சவரன் திருடு போனது. இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசில் ரஞ்சித்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரது உறவினர் குன்றத்தூரை சேர்ந்த லோகநாதனை (42), கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிடித்து வந்து, காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.  தொடர்ந்து, அவரை காவல் நிலையத்தில் wவைத்து 4 நாட்களாக போலீசார் சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. வலி தாங்க முடியாத லோகநாதன், நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் இருந்த கத்தியை எடுத்து, தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் சரிந்த லோகநாதனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: