வீரராகவ பெருமாள் கோயிலில் தேர் திருவிழா

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், தை பிரமோற்சவ விழாவில் நேற்று தேர்த் திருவிழா நடைபெற்றது. இதில்  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு உற்சவரை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில், தை பிரமோற்சவ விழா, கடந்த 9ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து உற்சவர் வீரராகவர் தேவி பூதேவி சமேதராக தினசரி காலை, மாலை இரு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 12ம் தேதி காலை கருட சேவை நடைபெற்றது.பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. தேரோட்டத்தையொட்டி வீரராகவ பெருமாள் தேவி, பூதேவி சமேதராக காலை 7 மணிக்கு பூந்தேரில் எழுந்தருளினார்.  அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘கோவிந்தா... கோவிந்தா’ என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.இன்று பிற்பகல் 3.30 மணிக்கு திருப்பாதம்சாடி திருமஞ்சனம், இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.  நாளை காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. 

Related Stories:

>