தூய்மை பணியாளர்களுக்கு சீருடை

பொன்னேரி:  மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வன்னிபாக்கம், கல்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சியில் பணிபுரியும்  தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் முதியோர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் பொங்கல் பை, சீருடைகள் ஆகியவை வழங்கப்பட்டது.  வன்னிபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம், துணைத்தலைவர் சித்ரா ரமேஷ்,  கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்கா துரைராஜ்,  துணைத்தலைவர் பொன்னி முத்துக்குமார், ஊராட்சி செயலர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

Related Stories:

>