குளிக்க சென்றபோது கல்லூரி மாணவி பலி: தோழிகள் 2 பேர் மீட்பு

ஆவடி: ஆவடி அடுத்த பொத்தூர் அல்ட்ராமார்டன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகள் பிரியதர்ஷினி (18). இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் லேப் டெக்னீஷியனாக முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்றுமதியம் பிரியதர்ஷினி, தாய் விஜயலட்சுமி, தங்கை நித்திய (16), மற்றும் இரண்டு தோழிகளுடன் அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குளிக்கச் சென்றார்.  அங்கு குளித்துக் கொண்டிருந்தபோது பிரியதர்ஷிணியும் 2 தோழிகளும் ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்த தாய், தங்கை சத்தம்போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளனர். அவர்கள் ஓடிவந்து முதலில் 2 தோழிகளை உயிருடன் மீட்டனர். அதன் பின்பு பிரியதர்ஷினியை குளத்தில் இருந்து வெளியில் கொண்டுவந்தபோது பிரியதர்ஷினி, மூச்சு பேசின்றி கிடந்தார்.

பின்னர் அவரை பொதுமக்கள் ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் பிரியதர்ஷினி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்த ஆவடி டேங்க் பேட்டரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  மேலும் புகாரின் அடிப்படையில்  போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories:

>