சிலிகுரி விமானம் திடீர் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரிக்கு நேற்று காலை 9.10 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் 122 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், சிலிகுரியில் மோசமான வானிலை நிலவுவதாக விமானிக்கு தகவல் கிடைத்தது. உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அவசர அவசரமாக தகவல் கொடுத்தார். இதனால் விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு ஓய்வு கூடத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

Related Stories: