×

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ராகுல், உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிடுகின்றனர்

சென்னை: மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடுகிறார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை அவனியாபுரத்தில் உலக பிரசித்திபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது. இந்நிலையில் மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிடுகிறார். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் திடலுக்கு வரும் அவர் 4 மணி நேரத்துக்கும் மேலாக ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுகிறார். முன்னதாக ராகுல் காந்தியும் அவனியாபுரம் வருகிறார். இந்நிலையில் ராகுல்காந்தியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அல்லது மதுரையில் இருவரும் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Rahul ,Udayanithi Stalin , Rahul and Udayanithi Stalin visit Avanyapuram Jallikattu competition today
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...