தங்கம் கடத்திய 2 பேர் கைது

சென்னை: சார்ஜாவிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் நேற்றுமுன்தினம் இரவு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சோ்ந்த சையத் இப்ராகிம்கனி (27), சாகுல்ஹமீது (36) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்கக்கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனர். அதன் எடை 1.42 கிலோ. மேலும் அவர்கள் வைத்திருந்த அட்டைப்பெட்டியில், ஐபோன்கள், லேப்டாப்கள், சிகரெட் பார்சல்கள், மதுபாட்டில்கள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தனர். தங்கம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.85 லட்சம். சுங்கத்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>