×

தமிழக அரசின் சார்பில் 2020-21ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: 2021ம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது வைகைச்செல்வன், 2020ம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது தமிழ்மகன் உசேன், அம்பேத்கர் விருது வரகூர் அ.அருணாச்சலம், அண்ணா விருது அமரர் கடம்பூர் எம்.ஆர். ஜனார்த்தனன், காமராஜர் விருது முச.தேவராஜ், பாரதியார் விருது பூவை செங்குட்டுவன், பாரதிதாசன் விருது அறிவுமதி (எ) மதியழகன், திரு.வி.க. விருது வி.என்.சாமி, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது வீ.சேதுராமலிங்கம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

சித்திரை தமிழ் புத்தாண்டு விருது: 2020ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது வி.ஜி.பி. உலக தமிழ் சங்கத்திற்கும், கபிலர் விருது செ.ஏழுமலை, உ.வே.சா விருது கி.ராஜநாராயணன், கம்பர் விருது எச்.வி ஹண்டே, சொல்லின் செல்வர் விருது நாகை முகுந்தன். உமறுப்புலவர் விருது ம.அ.சையத் அசன் (எ) பாரிதாசன், ஜி.யு.போப் விருது செருமன் நாட்டை சேர்ந்த உல்ரீகே நிகோலசு, இளங்கோவடிகள் விருது மா.வயித்தியலிங்கன், ஜெயலலிதா இலக்கிய விருது தி.மகாலட்சுமி, சிங்காரவேலர் விருது ஆ.அழகேசன், மறைமலையடிகளார் விருது மறை. தி.தாயுமானவன், அயோத்திதாச பண்டிதர் விருது கோ.ப.செல்லம்மாள், வள்ளலார் விருது ஊரன் அடிகள், காரைக்கால் அம்மையார் விருது மோ.ஞானப்பூங்கோதை, தேவநேயப்பாவாணர் விருது கு.சிவமண, வீரமாமுனிவர் விருது ஹாங்காங்கை சேர்ந்த கிரிகோரிஜேம்சு, சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது சோ.சேசாச்சலம்,

ராம.குருநாதன், ப குணசேகர், பத்மாவதி விவேகானந்தன், ஜோதிர்லதா கிரிஜா, ஜெ.ராம்கி (எ) ராமகிருட்டினன், சுவாமி விமூர்த்தானந்தர், மீரா ரவிசங்கர், திலகவதி, கிருட்டின பிரசாத் ஆகிய பத்து பேருக்கும் மற்ந்த விருதுகள் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வரால் வழங்கப்பட உள்ளன. விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக ரூ.1 லட்சம், தமிழ்த்தாய் விருது பெறும் தமிழ் அமைப்பிற்கு 5 லட்சம் ரூபாயும், தமிழ் செம்மல் விருது பெறும் விருதாளர் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Announcement ,Government of Tamil Nadu , Announcement of Thiruvalluvar Award for the year 2020-21 on behalf of the Government of Tamil Nadu
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...