×

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக 2016ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து, சென்னையில் வழக்கு தொடரப்பட்டது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். மேலும் 6 மாதத்திற்கு ஒரு முறை தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 2019ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டம் தவிர்த்து மீதம் உள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புளுக்கு மட்டும் தேர்தல் நடந்தது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி வரும் ஜூன் 30ம் தேதி வரை தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags : Extension of tenure of individual officers for urban local bodies
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...