டாஸ்மாக் கடை 3 நாள் மூடல்

சென்னை: சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூன்று நாட்கள் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் சீத்தாலட்சுமி அறிக்கையில் கூறியிருப்பதாவது; வரும் 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் 26ம் தேதி குடியரசு தினம், 28ம் தேதி வள்ளலார் நினைவு நாள் ஆகிய தினங்களில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகளை சேர்ந்த பார்கள், உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>