அமைச்சர் பாஸ்கரன் குளறுபடி பேச்சு பிரதமர் வாஜ்பாயை சந்திக்க முதல்வர் டெல்லி செல்கிறார்

சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசுகையில், ‘‘தற்போதய சூழலில் பயிர் அழுகி முளைத்து விட்டது என பெண்கள் கதறுகின்றனர். மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இழப்பீடு கேட்டு வருகின்றனர். விவசாயிகள் பற்றிதான் முதல்வர் சிந்தித்து வருகிறார். காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல் நாட்டுவிழாவிற்கு வருமாறு பிரதமர் வாஜ்பாயை அழைப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 18ம் தேதி டெல்லி செல்ல உள்ளார்’’ என்று பேசினார்.

பிரதமர் மோடியை அழைக்க செல்ல உள்ளதை, வாஜ்பாய் என மாற்றி அமைச்சர் கூறியதை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர் மற்றும் கூடியிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டத்தில், பிரதமர் நரசிம்மராவ் என்றும், பாரத ரத்னா எம்ஜிஆர் என்பதற்கு பதிலாக பாரத பிரதமர் எம்ஜிஆர் எனக்கூறி பீதியை கிளப்பினார். தற்போது இந்த வரிசையில் அமைச்சர் பாஸ்கரனும் பொதுமேடையில் உளறி வருவதால் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Related Stories:

>