×

மாஸ்டர் படம் திரையிட்ட தியேட்டர் மேனேஜர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று தமிழகம் முழுவதும் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் உள்ள காரணத்தினால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் பொதுமக்களை அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை சில திரையரங்குகள் மீறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று அயனாவரம் முத்தம்மன் கோயில் தெருவில் உள்ள கோபிகிருஷ்ணா திரையரங்கில் மாஸ்டர் படம் வெளியானது. அந்த தியேட்டரில் உள்ள கோபிகிருஷ்ணா ராதா ருக்மணி என மூன்று திரையரங்கிலும் இப்படம் வெளியானது. தமிழக அரசு அறிவித்துள்ள 50 சதவீத இருக்கைகள் என்ற உத்தரவை மீறி அளவுக்கு அதிகமாக டிக்கெட்கள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த தியேட்டரில் கூட்டம் அலை மோதியது. இதனையடுத்து, அயனாவரம் போலீசார் தொற்றுநோய் பரப்புதல் சட்டத்தின் கீழ் கோபி கிருஷ்ணா திரையரங்கு மேனேஜர் மணி(58) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல, ஈக்காடுதாங்கலில் உள்ள தியேட்டரிலும் தமிழக அரசின் அனுமதியை மீறி ரசிகர்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். இதனால், அந்த தியேட்டர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளில்  உள்ள திரையரங்குகளில் வெளியான படத்திற்கு 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் திரையிடப்பட்டன. ஆன்லைன் புக்கிங்கிலும் 100 சதவிகித டிக்கெட்டுகளே புக் செய்யப்பட்டன.

Tags : theater managers , Case against theater managers who screened the master film
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...