வைர நகைகளுக்கு தனிஷ்க் சலுகை அறிவிப்பு

சென்னை: வைர நகைகளுக்கு தனிஷ்க் நிறுவனம் சலுகை அறிவித்துள்ளது. பழைய தங்க நகைகளை மாற்றிக்கொள்வோரும் இந்த திட்டத்தில் பலன் பெறலாம். தங்க நகைகளுக்கு இந்தியாவின் நம்பிக்கையான நிறுவனங்களில் ஒன்றான தனிஷ்க் நிறுவனம், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2021க்கான ஷாகுன் என புதியநகை சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி, வைர நகைகளின் மதிப்பில் 21 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையை பெறலாம். ரூ.12 லட்சத்துக்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடி சலுகைகளும் வழங்கப்படும். இதுபோல், பழைய தங்க நகைகளை மாற்றி விட்டு, அதனை புதிய வைர நகைகளாக மாற்றிக்கொள்ளலாம்.

இதற்காக பழைய நகைகளுக்கு நூறு சதவீத எக்ஸ்சேஞ்ச் சலுகையை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கண்ட சலுகைகள் குறுகிய காலத்துக்கு மட்டுமே. எனவே, வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள தனிஷ்க் ஷோரூம் அல்லது https://www.tanishq.co.in/shagunfor21 என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும் ஷாப்பிங் செய்யலாம். இதுகுறித்து டைட்டான் நிறுவனத்தின் தனிஷ்க் சந்தைப்படுத்துதல் மற்றும் சில்லரை விற்பனை துறை துணை தலைவர் அருண் நாராயண் கூறுகையில், ‘‘2021க்கான ஷாகுன், புனிதமான ஒரு துவக்கத்தை வழங்குகிறது. புதிய தொடக்கத்தில் ஆசீர்வாதம் பெற வழி வகுக்கிறது’’ என்றார்.

Related Stories:

>