×

பொய் புகாரில் பணம் கேட்டு மிரட்டிய பெண் இன்ஸ்பெக்டர் உள்பட3 பேர் மீது வழக்குப்பதிவு: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்தவர் டி.வி.எஸ். ராஜசிம்மன் நாயுடு. இவர் சென்னையை சேர்ந்த விஷ்ணுபிரியாவுடன் இணைந்து வியாபாரம் செய்தார். இந்தநிலையில் லாபத்தில் முறையாக பங்கு தராததால், விஷ்ணுபிரியாவுடன் வியாபார தொடர்புகளை ராஜாசிம்மன் துண்டித்துள்ளார். இந்நிலையில் பணம் பறிக்கும் நோக்கில் விஷ்ணுபிரியா, உமாராணியுடன் இணைந்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததார்.  குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லாத நிலையில், பெண் ஆய்வாளர் ஞானசெல்வம், வழக்கு பதியாமல் இருக்க மூவருக்கும் சேர்த்நது ரூ.20 லட்ச வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆயிரம் விளக்கு காவல் நிலைய, துணை ஆணையர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், தன்னிடமிருந்து மோதிரங்கள், மொபைல் போன், வாட்ச், கிரெடிட் கார்ட் என ரூ.8 லட்சம் மதிப்புள்ளவற்றை பறித்துவிட்டதாகவும் ஆய்வாளர் மீது குற்றம் சாட்டியள்ளார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததை அடுத்து, ஆயிரம் விளக்கு காவல் நிலைத்தின் ஆய்வாளர் ஞானசெல்வம் மற்றும் உமாராணி, விஷ்ணுபிரியா ஆகிய மூவர் மீதும் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி இ.எம்.கே. யஷ்வந்த் ராவ் இங்கர்சால், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதரர் ராஜா சிம்மன் நாயுடுவின் புகாரில் முகாந்திரம் இருப்பதால், உரிய முறையில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும், அதுகுறித்த இறுதி அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

Tags : Egmore ,persons ,inspector , Egmore court orders prosecution of 3 persons, including a female inspector, for extorting money on a false complaint
× RELATED சென்னை எழும்பூரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!!