தாய்லாந்து ஓபன் பேட்மின்டன்: 2வது சுற்றில் கிடாம்பி

பாங்காக்: தாய்லாந்து ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றார். முதல் சுற்றில் சக வீரர் சவுரவ் வர்மாவுடன் நேற்று மோதிய கிடாம்பி 21-12, 21-11 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 31 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. பாங்காக்கில் கொரோனா பரிசோதனைக்காக மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரித்தபோது, அலட்சியமாக செயல்பட்ட சுகாதாரப் பணியாளரால் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியதாக கிடாம்பி குற்றம் சாட்டியிருந்தார். ரத்தம் சொட்டும் அந்த படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த நிலையில், முதல் சுற்றில் அவர் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை 19-21, 21-16, 21-14 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் கிம் ஜி ஜங் - லீ யோங் டே ஜோடியை போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories:

>