×

கழுத்தில் சங்கிலியை மாட்டி கணவரை நாய் போல் இழுத்து சென்றவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்

ஒட்டாவா: கனடாவில் ஊரடங்கு நேரத்தில் கணவரை நாயைப் போல் சங்கிலி கட்டி அழைத்து சென்ற பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் சேர்த்து இந்நாட்டு காவல்துறை ரூ.2.20 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இரண்டாவது சுற்று கொரோனா பரவல் காரணமாக கனடாவில் கடந்த 9ம் தேதி முதல், நான்கு வாரங்களுக்கு இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவது தடை செய்யப்பட்டுள்ளது.  

இருப்பினும், அத்தியாவசிய பணியாளர்கள், செல்லப் பிராணிகளுடன் நடைப்பயிற்சி செல்பவர்களுக்கு மட்டும் ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கியூபெக் நகரில் நாள்தோறும் 2,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், பெண் ஒருவர் தனது கணவருக்கு நாய்க்கு போடும் சங்கிலியை அணிவித்து நடைபயிற்சிக்கு கூட்டி சென்றுள்ளார். இதனை கவனித்த ரோந்து போலீசார் அவரிடம் கேட்டதற்கு, அவர் தனது செல்லப்பிராணியுடன் தான் நடைப்பயிற்சி செல்கிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து, அரசின் அறிவிப்பை மீறியதற்காக தம்பதியர் இருவருக்கும் தலா ரூ. 1,09,934 அபராதம் விதித்து விதிமீறலுக்கான வழக்கு பதிவு செய்தனர்.


Tags : A man has been fined Rs 2 lakh for dragging his husband like a dog with a chain around his neck
× RELATED துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன்...