×

போகி பண்டிகையில் வேளாண் சட்ட நகல் எரிப்பு: விவசாயிகள் கொண்டாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் 3 வேளாண் அவசர சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போகி பண்டிகையில், வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் கொண்டாடினர். அதில், மத்திய அரசின் வேளாண் அவசர சட்டத்தை கண்டித்து டெல்லியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இந்தவேளையில், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020, வேளாண் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் 2020 உள்பட பல்வேறு சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி அனைத்து வியாபாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு தலைமையில், ஒருங்கிணைத்த இந்த போராட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளியூர், கோவிந்தவாடி அகரம், புதுப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், நத்தப்பேட்டை, களியனூர், வையாவூர், முத்தியால்பேட்டை உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மத்திய அரசின் சட்ட நகல்களை, போகியில் எறிந்து தீ வைத்து எரித்து கொண்டாடினர். இதில், சங்க நிர்வாகிகள் சங்கர், சாரங்கன், டில்லிபாய், ஜீவா, புவனேஸ்வரி, பெருமாள், முருகேசன் உள்பட பலர் ஈடுபட்டனர்.

Tags : festival ,celebration ,Bogi , Copy of agricultural law burning at Bogi festival: Farmers' celebration
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...