பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அருளானந்தத்திடம் பல ரகசியங்கள் இருக்கிறது: போலீஸ் காவலில் ஹெரன்பால் கதறல்

கோவை: கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வழக்கில் ஏற்கனவே திருநாவுக்கரசு, சபரிராஜன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் (34), முன்னாள் அதிமுக பொள்ளாச்சி நகர இணை செயலாளர் ஹெரன் பால் (28), அதிமுக உறுப்பினர் பாபு (29) ஆகியோர் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இதில் ஹெரன் பாலை சிபிஐ போலீசார் நேற்று முன்தினம் காவலில் எடுத்தனர். இவரிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. நேற்று 2வது நாளாக விசாரணை நடத்தப்பட்டது. பேச மறுத்து சில மணி நேரம் அடம் பிடித்த ஹெரன் பால் பிறகு பல்வேறு தகவல்களை தெரிவித்தார். போலீஸ் தரப்பில் பாலியல் விவகாரத்தில் அரசியல் கட்சியை சேர்ந்த சிலரின் தொடர்பு குறித்து கேட்டனர்.

அப்போது ஹெரன் பால், ‘‘எனக்கு அரசியல் ரீதியான ெதாடர்பு பெரிய அளவில் இல்லை. என் நண்பர்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களுக்கு போவேன். அவர்கள்தான் எனக்கு பெண்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். நானாக எந்த பெண்ணையும் அழைத்து செல்லவில்லை. நண்பர்கள் அழைத்து வந்த பெண்களுடன் ஜாலியாக இருந்தேன்’’ எனக் கூறியாக தகவல் வெளியாகியுள்ளது. அருளானந்தம் செல்போனில் அரசியல் பிரமுகர்களை தொடர்பு கொண்டு பொள்ளாச்சிக்கு வர சொல்லுவார். எப்ப வேணாலும் வாங்க, எல்லா ஏற்பாடும் செய்து தருகிறேன் என அன்பாக அழைப்பார்.

அவரது அழைப்பின் பேரில் சிலர் பொள்ளாச்சி வந்திருக்கிறார்கள். குறுகிய காலத்தில் அவர் பொள்ளாச்சியில் பிரபலமான நபராக மாறி விட்டார். அவரிடம் பல ரகசியங்கள் இருக்கிறது. அவரை நன்றாக விசாரித்தால் மேலும் சிலர் சிக்குவார்கள். ஹெரன் பால் கூறிய சில தகவல்களை போலீசார் வீடியோ ஆதாரமாக பதிவு செய்தனர். விடிய விடிய தூங்க விடாமல் விசாரித்ததால் ஹெரன் பால் தனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

Related Stories:

>