நாமக்கல்லில் போக்குவரத்திற்கு இடையூறு விஜய் ரசிகர்கள் மீது தடியடி

நாமக்கல்: நாமக்கல்லில் போக்குவரத்திற்கு இடையூறு செய்ததால் விஜய் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கில் படம் திரையிடப்பட்டது. இதனால் அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் அதிகளவில் திரையரங்கு முன்பு நின்றிருந்தனர். இதனிடையே இன்று காலை 9.30 மணியளவில் திடீரென திரையரங்கம் முன்பு நின்றிருந்த ரசிகர்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலையின் நடுவே திரண்டு நடனமாடினர்.

இதனால் சேலம், திருச்செங்கோடு, கோட்டை ஆகிய சாலைகளில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ரசிகர்களில் சிலர் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories:

>