×

கொடைக்கானலில் கொட்டுது கனமழை மலைச்சாலையில் நிலச்சரிவு அபாயம்-மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் - பழநி சாலையில் சவரிக்காடு அருகே நேற்று மரம் விழுந்தது. மரத்தை அகற்றி ஒரு மணிநேரத்திற்கு பின் போக்குவரத்தை சரிசெய்தனர். மழையால் பழநி சாலையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிவதால், முன்னெச்சரிக்கையாக ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்து அருவிகளும் ஆர்ப்பரித்து கொட்டுகின்றன. மேல்மலை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளைப்பூண்டு அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் பாதிக்கப்படுமென விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

அசத்தும் அசேலியா

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்காவில் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட அசேலியா மலர்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. பனி சீசனில் மலரும் இந்த பூக்கள் தற்போது பூத்து குலுங்குகின்றன. பத்து வண்ணங்களில் பூக்கும் இயல்புடையது. இதனுடைய தாவரவியல் பெயர் ‘எரிகேசியா ரோடோடென்ரோம்’. இதனை சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

Tags : Kodaikanal , Kodaikanal: It is raining continuously in Kodaikanal, Dindigul district. Thus on the Kodaikanal - Palani road
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்