×

கொரோனா பாதிப்பு!: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அங்கன்வாடிகளை ஜன.31க்குள் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அங்கன்வாடிகளை ஜனவரி 31ம் தேதிக்குள் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் கலந்து ஆலோசித்த பிறகு திறக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஜகத்ராம் சனானி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், கொரோனா காரணமாக நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் 14 லட்சம் அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளதால் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே உடனடியாக அங்கன்வாடிகளை திறப்பதற்கு ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும். உரிய ஊட்டச்சத்து உணவுகள் கிடைப்பதை உறுதி செய்யவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியிருந்தார். கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, ஊட்டச்சத்து உணவுகளை குழந்தைகளின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், கொரோனா பரவல் காரணமாக அங்கன்வாடிகளை திறப்பது என்பது தற்போது சாத்தியமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் விசாரணை வந்தது. அச்சமயம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள அங்கன்வாடிகளை ஜனவரி 31ம் தேதிக்குள் திறக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அங்கன்வாடி மையங்களை திறப்பது தொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் அவர்கள் கலந்து ஆலோசித்த பின்பு இந்த முடிவை எடுக்க வேண்டும். குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவதை உறுதி செய்யவும் நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Tags : Corona ,areas ,Supreme Court ,Anganwadis , Corona, Restricted Area, Anganwadi, Jan.31, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...