×

10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் திறப்பு.. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோடு : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்காக பள்ளி திறந்தாலும், விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம், என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்,கோபி அருகேயுள்ள ஏளூரில் பயனாளிகளுக்கு இலவச ஆடு மற்றும் கறவை மாடும் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :  தமிழக முதலமைச்சர் நேற்று 10 மற்றும் 12 ம் வகுப்பு பள்ளி திறப்பு குறித்து ஆணை வழங்கி உள்ளார்.

சுகாதார துறை அறிவுரை மற்றும் ஆலோசனைப்படி பள்ளிகள் செயல்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். எந்தெந்த பாடங்களை நடத்துவது என்பது குறித்து அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களை பாதுகாக்க அனைத்து அறிவுரைகளையும் முதலமைச்சர் கூறி உள்ளார். அதன்படி பள்ளிகள் செயல்படும். இன்றைய சூழ்நிலையில் பொதுத்தேர்தல் அட்டவணை வந்த பிறகு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து அறிவிக்க உள்ளோம். 98 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலம்.
தனியார் பள்ளிகள் கட்டாய கட்டண வசூல் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொலைக்காட்சி மூலமாக கற்கும் போது பெற்றோர்கள் கண்காணிக்கலாம். செல்போன் மூலமாக கற்கும் போது கண்காணிக்க முடியாது.முதல் கட்டமாக 10, 12 ம் வகுப்பு திறக்கப்பட்டுள்ளது. இதற்காக 6029 பள்ளிகள் தயாராக உள்ளது. இனி படிப்படியாக எந்தெந்த வகுப்புகளை திறக்கலாம் என்று ஆய்வு செய்து திறக்கப்படும். பேருந்து இலவச பயண அட்டை இல்லை என்றாலும் ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணிக்கலாம், என்றார்.

Tags : Senkottayan ,school , Minister Senkottayan
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி