டெல்லியில் 50வது நாளாக விவசாயிகள் போராட்டம் :வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை ஓய மாட்டோம் என திட்டவட்டம்

டெல்லி :வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தும் டெல்லியில் 50வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி உபி, அரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியில் 50நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சட்டங்களை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் மீது நேற்று விசாரணை நடந்தது.

அப்போது வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்த நீதிமன்றம், பிரச்னைகளுக்கு தீர்வு காண 4 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 மாதத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் குழு அமைத்திருப்பதை விவசாயிகள் ஏற்கவில்லை. சட்டங்களை முழுமையாக ரத்து செய்வதே நிரந்தர தீர்வு, அதுவரை போராட்டம் தொடரும் என்று டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

Related Stories:

>