மைசூருவில் ஆய்வு கூட்டத்தில் பரபரப்பு: கலெக்டர் ரோகிணி, எம்எல்ஏ சாராமகேஷ் வாக்குவாதம்

மைசூரு: மைசூரு கலெக்டர் மற்றும் எம்எல்ஏ சாரா மகேஷ் ஆகியோரிடையே பனிப்போர் நடந்து  வந்த நிலையில், நேற்று நடந்த கூட்டத்தில் இருவருக்கும் இடையே நடந்த  வார்த்தைப்போர் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.   மைசூருவில்  சட்டப்பேரவை ஆவணங்களுக்கான குழுவினர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பொது  தணிக்கை குழு தலைவர் எம்எல்ஏ சாரா மகேஷ் கலந்துகொண்டார். கூட்டத்திற்கு  மாவட்ட கலெக்டர் வந்த ேபாது மேடையில் அவருக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என  கூறப்படுகிறது. இதனால், அவர் அதிகாரிகள் அமரும் வரிசையில் அமர்ந்து  கொண்டார். கூட்டத்தில், மாஸ்க் அணிந்து கொண்டு கலெக்டர் பேச்சை  ஆரம்பித்தார். அப்போது குறிக்கிட்ட எம்எல்ஏ சாரா மகேஷ், எங்களுக்கு சரியாக  கேட்கவில்லை. இதனால், மாஸ்க்கை எடுத்துவிட்டு பேசுங்கள் என்று கூறினார்.  அதற்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி, மாஸ்க்கை எடுக்கமாட்டேன்.  

மாஸ்க் அணியாமல்  கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று பதிலளித்தார். இதை தொடர்ந்து,  கூட்டத்தில்  எனக்கு தொடர்புடைய எந்த விஷயமும்  விவாதிக்கப்படவில்லை. இதனால், நீங்கள் அனுமதி அளித்தால் கூட்டத்தில்  இருந்து வெளியேறுகிறேன் என்று கூறியுள்ளார்.  இதற்கு பதிலளித்த எம்எல்ஏ சாரா  மகேஷ், உங்களை கூட்டத்திற்கு அழைக்கவில்லை. நீங்களாகவே வந்துள்ளது  மகிழ்ச்சி. எந்த கூட்டம் நடந்தாலும் மாவட்ட கடெக்ருக்கு தகவல் கொடுக்க  வேண்டும் என்பதால் கொடுத்துள்ளோம். மைசூருவுக்கு வந்த சட்டப்பேரவை ஆவணங்கள்  குழுவை நீங்கள் வரவேற்கவில்லை. நேரம் இருந்தால்  இருங்கள். வேறு பணி இருந்தால் செல்லுங்கள் எனக் கூறினார். இதை தொடர்ந்து,  கலெக்டர் ரோகிணி உடனே கூட்டத்தில் இருந்து வெளியேறி சென்றார். எம்எல்ஏ சாரா  மகேஷ், கலெக்டர் ரோகிணி ஆகியோருக்கு இடையே நடந்து வந்த பனிப்போர் நேற்று  நடந்த கூட்டத்தில் பகிரங்கமாகவே வெடித்தது. இருவருக்கும் இடையே நடந்த  வார்த்தைப்போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது தொடர்பாக  எம்எல்ஏ சாரா மகேஷ் கூறியதாவது: பேரவை ஆவணங்கள் குழு மாவட்ட கிராம  வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் குழு கணக்குகளை பரிசீலனை செய்யும் கூட்டம்  மாவட்ட பஞ்சாயத்து கூட்டரங்கத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பேரவை  குழுவை மாவட்ட கலெக்டர் வரவேற்றிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பணிகளுக்கு  சென்றிருந்ததால் தாமதமாக வந்தார். மேலும், அனுமதி பெற்று முன்னரே  சென்றுவிட்டார். இது புரோட்டோகால் விதிமுறை மீறல். குழுவினர் வருவதை  கலெக்டருக்கு ஒருவாரத்திற்கு முன்னரே தகவல் கொடுத்துள்ளோம். ஆனாலும்,  இதுபோல் நடந்துள்ளது. இதுதொடர்பாக சபாநாயகரின் கவனத்திற்கு  கொண்டு செல்லப்படும் என்றார்.

Related Stories:

More