×

டெல்லியில் 386 பேருக்கு தொற்று உறுதி

புதுடெல்லி: டெல்லியில் தொடர்ந்து நேற்று 9வது நாளாக கோவிட் தொற்று 500க்கும் குறைவான எண்ணிக்கையில் பதிவானது. டெல்லியில் கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்த எண்ணிக்கை  6,30,892 ஆகவும், இறப்பு எண்ணிக்கை நேற்றைய நாளில் பதிவான 16 பேரையும் சேர்த்து 10,707ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய  நிலவரப்படி, ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 3,354  லிருந்து தற்போது 3,179  ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் நோய் தொற்று பாசிட்டிவ் விகிதம் 0.51  சதவீதமாக பதிவாகியுள்ளது. சுமார் 38,706 ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள்  மற்றும் 37,207 ரேபிட் ஆன்டிஜென் சோதனைகள் உட்பட, முந்தைய நாள்  நடத்தப்பட்ட 75,913 பரிசோதனைகள் செய்யப்பட்டது. டெல்லியில் மொத்தமுள்ள 12,018 படுக்கைகளில், 10,664 படுக்கைகள் காலியாக உள்ளன என்று தெரிவித்துள்ளது.



Tags : Delhi , 386 people confirmed infected in Delhi
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு