டெல்லி கலவர வழக்கு வக்கீல்கள் நியமனம் குறித்து ஐகோர்ட்டில் போலீஸ் விளக்கம்

புதுடெல்லி: டெல்லிகலவரம் தொடர்பாக நீதிமன்றங்களில் போலீசார் தொடுத்து, 1,500 பேருக்கும் அதிகமான நபர்களை விசாரணை கைதிகளாக சிறையில் அடைத்து உள்ளனர். அந்த வழக்குகளில் போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வாதாட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்பட அரசு வக்கீல்கள் பலர் நியமனம் செய்யப்பட்டனர். அதனை ஏற்க மறுத்த போலீஸ் தரப்பு, ஆளுநர் அனில் பைஜாலிடம் அது குறித்து குறை கூறியது. ஆளுநர் தலையிட்டு, போலீஸ் பரிந்துரையே நிலைக்கும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டது. போலீஸ் பரிந்துரைக்கே ஜனாதிபதியும் ஒப்புதல் தெரிவித்தார்.இந்நிலையில் போலீசால் நியமனம் செய்யப்பட்ட வக்கீல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீபா எம் சிங் அமர்வில் டெல்லி வக்கீல்கள் நல சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சிங் நேற்று கூறுகையில், ‘‘வக்கீல்கள் நல சங்கம் தொடுத்துள்ள வழக்கை பொது நலன் வழக்காக கருதுகிறேன்.

எனவே இதனை பொது நலன் வழக்குக்கான அமர்வில் மார்ச் 15ம் தேதிக்குள் விசாரிக்கும் வகையில் மனுவை பட்டியலிடும்படி பதிவாளருக்கு அறிவுறுத்துகிறேன்’’, என்றார். இந்த பிரச்னையில், போலீஸ் நியமித்த வக்கீல்கள் ஒருதலைபட்சமாக செயல்படக்கூடும். அதனால் குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு உரிய நீதி கிடைக்காது’’, என்பது வக்கீல் நல சங்கத்தினரின் ஆதங்கம். அதே வேளையில், அரசு நிர்ப்பந்தம் காரணமாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் அகமது உள்ளிட்ட வக்கீல்களை நாங்கள் நியமிக்கவில்லை. தீவிர ஆலோசனைக்குப் பின் காவல்துறை தானாக எடுத்த முடிவு என நீதிபதியிடம் போலீஸ் தரப்பில் நேற்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>