புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மத்திய அமைச்சர் வீடு நோக்கி பேரணி செல்ல முயற்சி: இளைஞர் காங்கிரசார் கைது

புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வீடு அருகே போராட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசாரை கைது செய்து விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் எனக்கோரி விவசாயிகள் டெல்லி எல்லையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசயாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், விவசாய சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்து நேற்று மத்திய வேளாண் துறை அமைச்சர் தோமர் வீடு அருகே போராட்டம் நடத்த முன்றனர்.

காமராஜ் மார்க் அருகே ஒன்று திரண்ட காங்கிரசார், மோடி அரசுக்கு எதிராக ேகாஷம் எழுப்பியவாறு கிருஷ்ணாமேனன் மார்க் பகுதியிலுள்ள தோமரின் வீடு நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது, பேரிகார்டு தடுப்புகளை உடைத்துக்கொண்டு செல்ல முன்றதால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். குறிப்பாக, இளைஞர் காங்கிரசின் தலைவர் சீனிவாஸ் பி மற்றும் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டு கன்னாட்பிளேஸ் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக காங்கிரசின் தேசிய ஊடக பொறுப்பாளர் ராகுல் ராவ் தெரிவித்தார்.

Related Stories:

>