×

பெங்களூரு முன்னாள் மேயர் ஜாமீன் : மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

பெங்களூரு: பெங்களூரு கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முன்னாள் மேயர் சம்பத்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை கர்நாடக உயர்நீதிமன்றம் அடுத்த வாரம் ஒத்தி வைத்தது. பெங்களூரு கேஜிஹள்ளி, டிஜேஹள்ளியில் கடந்தாண்டு ஆகஸ்ட் 11ம் தேதி நடந்த கலவரத்தில் தொடர்புடையதாக முன்னாள் மேயர் ஆர்.சம்பத்ராஜை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய பின் சிறையில் அடைத்துள்ளனர். தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அம்மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதம் செய்தார். அதை தொடர்ந்து அரசு தரப்பு வக்கீல் காலவகாசம் கேட்டதை தொடர்ந்து ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்தவாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

 இதனிடையில் இதே கலவரத்தில் தங்களின் சொத்துக்களை இழந்தவர்களுக்கு இழப்பீடு பெற்று கொடுப்பதற்காக மாநில அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.எச்.கெம்பண்ணா தலைமையில் கிளைம் கமிஷன் அமைத்தது.
ஆனால் அந்த கமிஷன் செயல்பட இன்னும் செயலாளர் நியமிக்கவில்லை. அலுவலகம் ஒதுக்கீடு மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்யவில்லை. இது குறித்து கடந்த 6ம் தேதி உயர்நீதிமன்ற பதிவாளரிடம் நீதிபதி கெம்பண்ணா புகார் கொடுத்தார். அதை சுயவழக்காக நீதிமன்றம் பதிவு செய்து கொண்டது. அவ்வழக்கு நேற்று தலைமை நீதிபதி அபய் சீனிவாஸ் ஓகா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கிளைம் கமிஷனருக்கு ஏன் இதுவரை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று விளக்கம் கேட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.



Tags : mayor ,Bangalore , Former Bangalore mayor released on bail
× RELATED ஈக்வடார் நாட்டின் மேயர் பிரிஜிட்...