தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் முக்கியம்: மத்திய அமைச்சர் பேட்டி

சென்னை: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில், மத்திய நுகர்வோர் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் தான்வே ராவ் சாஹிப் தாதாராவ் நேற்று குடும்பத்துடன் தரிசனம் செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்  நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.ஒரு தமிழக குடிமகன் மகாராஷ்டிராவுக்கு சென்றால், அங்கு அவருக்கு புதிய அட்டை பெற வேண்டியிருந்தது.

அதே போல் அவர் தமிழகம் வரும்போது, இங்கே மீண்டும் ரேஷன் கிடைக்குமா. இதை கருத்தில் கொண்டு, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில்  தமிழகம் சேர்கிறது. தமிழகத்தில் பொருந்த கூடிய ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் மிகவும் முக்கியமானது. நான் அதில் கவனம் செலுத்துவேன். புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு, தமிழக பொங்கல் பரிசு கிடைப்பது பற்றி  கலெக்டரை சந்தித்து பேசுவேன் என்றார்.

Related Stories:

>